புதன், 16 அக்டோபர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சித்த மருத்துவ குறிப்புகளும் அதன் பயன்களும் !!

குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

உடல் சக்தி பெற: இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
 
வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.
 
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
 
உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.
 
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.
 
நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.
 
மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.