வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (10:10 IST)

ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் ஓமம் !!

Omam
நாம் சாப்பிடும் உணவானது எளிதில் ஜீரணிக்கவும், வயிறு சம்மந்தமான கோளாறுகள் அனைத்தும் நீங்கவும், ஜலதோஷம், ஆஸ்துமா போன்றவை நீங்கவும் ஓமம் பெரிதும் உதவுகிறது.


ஒரு லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் ஓமத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் பசியின்மை நீங்கும். அதோடு தினம் ஓமத்தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் வராது என்று கூறப்படுகிறது.

வயிற்றில் ஏதாவது கோளாறு இருந்தாலோ, வயிறில் அடிக்கடி சத்தம் வந்தாலோ, ஓமத்தையும் சீரகத்தையும் தீயாதபடி வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு தினமும் சாப்பிட்ட பிறகு இருவது நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிறு கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தீரும்.

ஓமம் மற்றும் பெருஞ்சீரகத்தை கொத்தமல்லி சாறில் ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, சாப்பிடுவதற்கு முன்பு இந்த பொடியை தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ஜீரண சக்தி நன்கு அதிகரிக்கும். அதோடு நன்றாக பசி எடுக்கும்.

ஜலதோஷம், மூக்கடைப்பு போன்றவற்றை விரட்டவும் ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓம பொடியை ஒரு துணியில் கட்டி அதை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.