1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ள இந்துப்பு !!

இந்துப்பு என்று அழைக்கப்படும் பாறை உப்பானது இமாலய உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்துப்புவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன  மேலும் சித்தமருத்துவ தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.

* சித்த மருத்துவத்தில் இந்துப்பை சிறு நீரக மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. இந்து உப்பு குறைவான உவர்ப்பு தன்மை உடையது. இதை நேரடியாக உணவுகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம் தயிர், மேர் அனைத்திலும் பயன்படுத்தலாம்.
 
* ஜீரணம் மற்றும் அஜீரண கோளாறுகளை சரிப்படுத்தும் ஜீரணத்திற்கு உதவுகிறது. உடலின் அமில கார நிலையை சமப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது.
 
* நுண்ணூட்டச் சத்துக்களை சமப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
 
* உடல் எடையை குறைக்க உதவுகிறது. தொண்டை வலி மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது.
 
* எலுமிச்சை பழச்சாறுடன் இந்த குடிக்க இன்புளுவென்சா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும். மூச்சுத்திணறலை கட்டுப்படுத்துகிறது.