வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பிரக்கோலி எதற்கெல்லாம் பயன் அளிக்கிறது...?

வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கரோடின் மற்றும் பி வைட்டமின்கள்  நிறைந்தது. 
பிரக்கோலி நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது.
 
பிரக்கோலி எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் கே அளவு பிரக்கோலியில் அதிகம்  உள்ளது.
பிரக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின்  டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. 
 
பிரக்கோலி புற்று நோயைத் தடுக்கும் பண்பு நிறைந்தது. புற்றுநோய்க்கு மட்டும் உதவாமல், கல்லீரல் செயல் திறனை அதிகரிக்கிறது. இது போன்ற பண்புகள் உள்ளதால் இது ஒரு தனித்தன்மை வாய்ந்த காயாகும்.
 
பிரக்கோலி நார்ச்சத்து நிறைந்தது. எனவே அது ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது. பிரக்கோலியை வேக வைத்து  உண்டால் அது உடலுக்கு மிகவும் நல்லது.