1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 டிசம்பர் 2025 (18:53 IST)

கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வந்தால் என்ன பிரச்சனை?

கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வந்தால் என்ன பிரச்சனை?
கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வடிவது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான தொந்தரவாகும். மருத்துவ ரீதியாக இது 'எபிஃபோரா' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். 
 
முதன்மையான காரணம், கண்கள் வறண்டு போவது . கண்கள் போதுமான ஈரப்பதம் இல்லாதபோது, அதை சரிசெய்ய மூளை அதிகப்படியான கண்ணீரை சுரக்க செய்கிறது. இதனால் கண்கள் எப்போதும் நீர் கோர்த்தது போல காணப்படும்.
 
மேலும், ஒவ்வாமை தூசு, புகை அல்லது காற்றில் உள்ள மாசு காரணமாகவும் கண்கள் சிவந்து நீர் வடியும். கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்குக் கண் சோர்வு ஏற்பட்டு இந்நிலை உண்டாகலாம். 
 
கண்ணீர் வெளியேறும் பாதையில் அடைப்பு இருந்தாலும் நீர் தேங்கி வழிய தொடங்கும். பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்டால், கண்ணீருடன் அரிப்பு மற்றும் பிசுபிசுப்பு தன்மையும் இருக்கும். சாதாரணமாக தெரிந்தாலும், பார்வையில் மங்கல் இருந்தாலோ அல்லது வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். 
 
Edited by Mahendran