ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

முழு தாவரமும் மருத்துவ நன்மைகள் கொண்ட கண்டங்கத்திரி!!

கண்டங்கத்திரி இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் பொன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகிறது. 
ஆஸ்துமாவிற்கு இச்செடியினை பொடித்து உண்ணுவது பழக்கத்தில் உள்ளது. காரணமில்லாத வரட்டு இருமலுக்கும் இது நல்ல தொருமருந்து. கீல் வாதம், மார்சளி, வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.
 
கண்டங்கத்திரி இலைச்சாறு 3 தேக்கரண்டி சிறிதளவு தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம், 3 நாட்கள் குடிக்க சளி குணமாகும்.
 
கண்டங்கத்திரி செடியை நிழலில் உலர்த்தி, பொடி செய்து கொண்டு சம அளவு கற்கண்டுத் தூள் சேர்த்து கலக்கி, இதில் அரை தேக்கரண்டி தூளுடன் தேவையான அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் கட்டுப்படும்.
கண்டங்கத்திரி இலை, வேர், காய் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. இவை கோழையகற்றும்; சிறுநீர் மற்றும் வியர்வையை  அதிகமாக்கும்.
 
கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க  பல்வலி, பல்கூச்சம் தீரும்.
 
கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. பழங்கள் இருமல், இரைப்பு, சயம், கபம், பல்லரணை, புடை நமைச்சல் இவற்றை நீக்கும். பலத்தையும் பசியையும்  உண்டாக்கும்.