1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (21:35 IST)

குறட்டை பிரச்சனையா; தினமும் இரவு இதை ஒரு டம்ளர் குடித்தால் போதும்

குறட்டை விடுவதால் அருகில் உள்ளவர்கள் தூங்க முடியாமல் தவிப்பார்கள். குறட்டை வருவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான சளி தேங்கியிருப்பது தான். அப்படி தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றிவிட்டால், சுவாசக்குழாய் சற்று விரிவடைந்து, குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.



 

 
இந்த பிரச்சனையில் இருந்து விடுப்பட இந்த பானத்தை தினமும் இரவு ஒரு டம்ளர் குடித்தால் போதும். பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்.
 
ஆப்பிள் – 2; எலுமிச்சை – 1/4; கேரட் – 2; இஞ்சி – 1 துண்டு; 
தண்ணீர் – 1/2 கப்
 
இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸ்-யில் நன்கு அரைத்தால் பானம் தாயாராகிவிடும். இந்த பானத்தை இரவில் தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன்பு பருக வேண்டும்.