அதிக மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் பூசணி விதைகள் !!
பூசணி விதைகள் அதிக மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது. மேலும் அவற்றில் பொட்டாசியம், வைட்டமின் பி 2 மற்றும் ஃபோலேட் ஆகியவை உள்ளன.
பூசணி விதைகள் நம் உடலிலுள்ள இரத்த சர்க்கரையின் அளவை சரியான அளவில் பராமரித்து, நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும், உயர் இரத்த அழுத்த பிரச்சனையும் இருந்தால், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இவர்கள் பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஜிங்க் சத்து (துத்தநாகம்) மிகவும் அவசியமானது. ஜிங்க் சத்து பூசணிக்காய் விதைகளில் வளமான அளவில் இருப்பதால், ஆண்கள் பூசணி விதைகளை சாப்பிட்டால் புரோஸ்டேட் ஆரோக்கியம் மேம்படுவதோடு, விந்தணுக்களின் வடிவம், தரம் மற்றும் எண்ணிக்கையை மேம்படுத்தும்.
பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள சத்துக்கள் பெருங்குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.