1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (18:02 IST)

தீராத நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பூனைக்காலி !!

பூனைக்காலியில் அதிகளவு டோபாமைன்  வேதிபொருள் நிறைந்துள்ளது. இந்த பூனைகாலி விதைகளை தண்ணீரில் இட்டு கஷாயம் போல காய்ச்சி குடித்துவந்தால் நடுக்க வியாதிகள் குணமாகும்.

பூனைக்காலி காயையோ கொட்டைகளையோ உணவில் சேர்த்துக்கொள்ளும் போது சர்க்கரை நோய் கட்டுபடுத்தப்படுகிறது. வராமலும் தடுக்கப்படுகிறது.
 
ஹைப்போ தைராய்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் உணவில் கண்டிப்பாக எடுத்து கொள்ள சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் பரிந்துரைக்கப் படுகிறார்கள். உடல்நிலை அதிகரிப்பு, மயக்கம் போன்றவற்றையும், முறையற்ற மாதவிடாயையும் கூட குணப்படுத்துகிறது.
 
இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு சத்து பாதிப்புகளால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகிறது பூனைக்காலி. இவர்கள் பூனைக்காலியை தொடர்ந்து உணவில் பயன்படுத்தலாம். 
 
தீராத நோய்களையும் கூட குணப்படுத்தும் ஆற்றல் இந்த பூனைகாலி விதைகளில் உள்ளது. 
 
தேநீர்: பூனைக்காலி தேநீர் அருந்துவதால் நோய் எதிர்ப்புதிறன் அதிகரிக்கிறது, சர்க்கரை, தைராய்டு, உடல் சோர்வு, முளைபாதிப்புகள் குறைகிறது. கட்டுக்குள் இருக்கிறது. கைகால் நடுக்கம் படபடப்பு மயக்கம் இவையாவும் அறவே ஏற்படுவதில்லை.
 
பூனைக்காலி விதைகளை சிறுதீயில் நன்றாக வறுத்து அதனுடன் இரண்டு ஏலக்காய்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை சாதரணமாக டீ தயாரிக்கும் முறையில் பாலுடன் சேர்த்து அருந்தலாம். அல்லது இந்த பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டுடன் சேர்த்து அருந்தலாம்.