1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 10 ஜனவரி 2022 (12:59 IST)

நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவர உதவும் ரணகள்ளி மூலிகை !!

ரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் ரணகள்ளி மூலிகைக்கு உள்ளது.

காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட, காது வலி உடனே குணமாகும். 
 
ரணகள்ளி மூலிகை இலைகளை நன்றாக மைய அரைத்து வெற்றிலையோடு சேர்த்து, புண்கள் காயங்கள் கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட, வலி உடனடியாக குறைந்து, காயம் விரைவில் குணமடையும்.
 
ரணகள்ளி மூலிகையின் இலைகள் சிறுநீரகத்தில் எவ்வளவு பெரிய கல் இருந்தாலும் ஏழே நாட்களில் குணப்படுத்தும். மூலிகையின் இலைகளை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இலையின் அளவை கொஞ்சம்கொஞ்சமாக அதிகரித்து ஏழு நாட்களும் ரணகள்ளி இலையை சாப்பிடலாம். 
 
ரணகள்ளி மூலிகையின் இலைகளை மருந்தாக எடுத்துக்கொள்ளும் தினங்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி மீன், முட்டை போன்ற உணவுகளையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 
ரணகள்ளி இலையை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பவுடர் மலச்சிக்கலை குணமாக்குகிறது. சரிமான பிரச்சனைகளையும் குணமாக்குகிறது. மருத்துவரின் சரியான ஆலோசனையின் பேரில் இந்த மருத்துவத்தை பின்பற்றுவது நல்ல பலனை தரும்.