1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வு தரும் மாதுளம் பழம் !!

சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகாமல் அவதிப்படுபவர்கள், உணவிற்கு முன் ஒரு டம்ளர் மாதுளை பழச்சாறு அருந்திவிட்டு பிறகு சாப்பிட்டால் உணவு நன்றாக ஜீரணமாகி வெளியேறிவிடும். குடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை சுத்தப்படுத்தி குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இதயம் நன்றாக ஆரோக்கியமாக வேலை செய்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் வாழ்நாளும் அதிகமாக இருக்கும். மாதுளைப்பழத்தில் உள்ள கால்சியம் சத்து இதயத்தின் தசைப் பகுதிகள் வலுவுடன் செயல்படுவதற்கு உதவுகிறது. தினமொரு மாதுளை எடுத்துக்கொள்வதன் மூலம் இதயத்திற்கு தேவையான  சத்துகள் கிடைக்கின்றன.
 
மாதுளை பழத்திலுள்ள இனிப்பு சுவையும், புளிப்பு சுவையும் பேதிக்கு சிறப்பான மருந்தாகும். மலத்துடன் ரத்தம் வெளியேறுகிறது என்றால் 50 மில்லி மாதுளை பழச்சாறு எடுத்துக் கொண்டால் போதும். இதிலுள்ள துவர்ப்பு சக்தி இப்பிரச்சினையை கட்டுப்படுத்தி தீர்வு கொடுக்கும்.
 
பித்த வாந்தி ஏற்படும் பொழுது 100 மில்லி அல்லது 50 மில்லி மாதுளை பழ சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் உடனடியாக தீர்வு கிடைக்கும். தேவையின்றி உடலில் இருக்கும் பித்தநீர் வெளியேறிவிடும்.
 
கர்ப்பிணி பெண்கள் மாதுளை பழத்தை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆரோக்கியத்தை கொடுத்து, குழந்தையின் மூளையை நன்றாக வளர்ச்சி அடைய உதவுகிறது.
 
மாதுளைப்பழத்தில் எல்லாஜிக் அமிலமும், வைட்டமின் சி யும் அதிகம் இருப்பதால் பெருங்குடலில் புற்றுநோய் பரவாமல் பாதுகாக்கிறது. புற்றுநோய் இருப்பவர்கள்  2 பெரிய மாதுளை பழத்தை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது. சிறியதாக இருந்தால் மூன்று எடுத்துக் கொள்ளலாம்.