திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (11:05 IST)

நீரிழிவு நோயாளிகள் இழக்கும் உடல் பலத்தை மீட்டு தரும் பிரண்டை !!

வயிற்றில் வாயு கோளாறு ஏற்பட்டு அவதியுறுபவர்கள் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகள் போன்றவை நீங்கும்.


எலும்பு முறிவால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை வாரம் மூன்று முறை துவையலாகவோ, சட்னியாகவோ உணவுடன் சேர்ந்து சாப்பிட உடைந்த எலும்புகள் வேகமாக கூடும்.

மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்படுவதுடன், அடி முதுகு பகுதி வலி, இடுப்பு வலி போன்றவை ஏற்படும். இப்படியான காலங்களில் பிரண்டை தண்டுகளை துவையல், சட்னி, ரசம் போன்ற எந்த பக்குவதிலாவது செய்து சாப்பிட நலம் பயக்கும்.

பிரண்டை தண்டுகளை நன்கு அரைத்து அதிலிருந்து எடுக்கப்படும் சாறுகளை ஆஸ்துமா மற்றும் இன்ன பிற நுரையீரல் சம்பந்தமான நோய்களால் அவதியுறுபவர்கள் அருந்தி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்றாக பிரண்டை இருக்கிறது. இதில் நிறைந்திருக்கும் காரத்தன்மையே உடலில் ஓடும் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தடுத்து, நீரிழிவு நோயாளிகள் இழக்கும் உடல் பலத்தை மீண்டும் தருகிறது.

பிரண்டையை பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் பிரண்டையை இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து நரம்புகள், ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பை கரைத்து, அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.