1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : திங்கள், 14 மார்ச் 2022 (09:30 IST)

முகம் பளபளப்பாக வைத்துக்கொள்ள சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

மஞ்சள் தூள், புதினா சாறு கலந்து, உங்கள் முகப்பரு வடுக்களுக்கு தடவலாம். இதை 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து இருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.


மஞ்சள் தூள்: ஆன்டி-பாக்டீரியாவாகவும் மற்றும் புதினாவிலும் இந்த பண்புகள் இருக்கிறது. எனவே, இவை உங்கள் பருக்களை மிக வேகமாக தீர்க்கும்.

சமையல் சோடா மற்றும் நீர் இவற்றை ஒரு கலவையாக செய்து வைத்து 4 நிமிடங்கள் வடுக்கள் மீது பேஸ்ட் போல போடவும், இதை சூடான நீரில் அலச வேண்டும்.

வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.

கொத்தமல்லி இலைகளை சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு லவங்கப்பட்டை தூள் கலந்து தினமும் இருவேளை முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவுபெறும். முகப்பரு தொந்தரவும் குறையும்.

ஒரு கைப்பிடி துளசியுடன் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்து நன்றாக குழைத்து, முகத்தில் பூசுங்கள். உலர்ந்த பின்பு கழுவுங்கள். துளசி சரும பொலிவை மேம்படுத்தும். மஞ்சள் சருமத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள உதவும். முகப்பரு பிரச்சினையும் தீரும்.

முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.