அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள கடலை எண்ணெய் !!

Peanut oil
Sasikala|
சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது.


நிலகடலை அதிகமாக உற்பத்தியாகும் இந்தியாவில், மலிவான விலையில் கிடைப்பதால் இதை அலட்சியப்படுத்தி வருகிறோம்.
 
நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
 
கடலை எண்ணெய்யில் போலிக் அமிலம் நிறைந்துள்ளதால், தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், மகப்பேறு எளிதாக இருக்கும் என்று  கூறப்படுகிறது.
 
கடலை எண்ணெய்யில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது.
 
கடலை எண்ணெய்யில் அடங்கியுள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதனால் மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவது  தவிர்க்கபடுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
 
நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின்  வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
 
கடலையில் அதிகளவு புரோட்டின் நிறைந்து உள்ளது. அதேபோல இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி போன்றவையும் நிறைந்துள்ளது.  அதாவது, அசைவ உணவு சாப்பிடாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலை சாப்பிடலாம்.


இதில் மேலும் படிக்கவும் :