1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (15:32 IST)

மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் கால்சியம் சத்து குறைபாட்டை போக்கும் பருப்புக்கீரை !!

கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் பருப்புக் கீரையைப் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.


பருப்புக்கீரையானது பித்தம் உடம்பு உள்ளவர்கள், அடிக்கடி தலைசுற்றல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றது. பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

பருப்புக்கீரையை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

பருப்பு கீரையை வேர்வை கொப்பளங்கள், வெந்நீர் கொப்பளங்கள், தீக்காயத்தால் உருவான கொப்ளங்களுக்கும் அரைத்து தடவலாம். பருப்புக் கீரையின் விதைகளை சிறிதளவு எடுத்து இளநீரில் போட்டு பருகினால் சீதபேதி நிற்கும்.

பருப்பு கீரையானது வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற கீரையாகும். பருப்புக் கீரை மசியலுடன் நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு, நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும்.

பருப்புக் கீரையை வெயில் காலத்தில் ஏற்படுகின்ற அம்மை மற்றும் அக்கி பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். பருப்புக் கீரையானது மலச்சிக்கலைப் போக்குகிறது, வயிற்றில் உள்ள குடற்புழுக்களை அகற்றுகிறது. இரைப்பையில் மிகுதியாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும் நெஞ்சு எரிச்சலை போக்குகிறது.