1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (14:10 IST)

மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரும் பேரிச்சம்பழம் !!

தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்பு வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.


பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூலப்பருட்கள் அதிக அளவில் உள்ளது. இது மனிதர்களில் உடலின் எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது.

உணவில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சிலருக்கு கண் பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றது.

தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில பேரீச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தினால் நரம்பு வலுப்பெற்று ஆண்மை குறைபாடு நீங்கும்.

தினந்தோறும் பேரிச்சம்பழம் சாப்பிடுபவர்களுக்கு கண்களின் பார்வைத்திறன் மேம்பட்டு கண்புரை போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

கருவுற்றிருக்கும் பெண்கள், பேரிச்சம் பழங்களை அதிகம் சாப்பிட்டு வருவது, அப்பெண்களுக்குப் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.