செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா பப்பாளி !!

பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்க கூடிய பழம். மாதவிலக்கு சரியான நேரத்துக்கு வரவேண்டுமென்றால் மாத்திரைகளை அணுக வேண்டியதில்லை. பப்பாளிக்காயை சமைத்து இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு வரும்.

பப்பாளிக்காயை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி பாசிபயறு, தேங்காய் சேர்த்து பொரியலாக்கி சாப்பிட வேண்டும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள்  சாப்பிட்டால் மறுநாள் மாதவிலக்கு உண்டாகும். அதிகம் எடுக்க வேண்டாம். பப்பாளிக்காயை அரைத்து சாறாக்கியும் குடிக்கலாம். ஒரு தேக்கரண்டிக்கு மேல் குடிக்க  கூடாது.
 
வாய்ப்புண்ணுக்கு கைவைத்தியம் பப்பாளிக்காயிலிருந்து வெளிவரும் பால் தான். வாய்ப்புண் பிரச்சனையால் தவித்துவருபவர்கள் பப்பாளிக்காயை நறுக்கினால்  வெளிவரும் பாலை புண்ணின் மீது தடவினால் புண்ணை விரைவில் ஆற்றும்.
 
கால் பாதங்களில் சேற்றுப்புண், பாத எரிச்சல், வறண்ட பாதம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இவை நிவாரணம் தரும். பப்பாளிக்காயிலிருந்து பெறப்படும் பாலுடன் சம அளவு பசும்பாலை காய்ச்சாமல் கலந்து சேற்றுப்புண் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
 
தொடர்ந்து ஒரு மண்டலம் வரை தடவி வந்தால் நாள்பட்ட சேற்றுப்புண்ணும் குணமாகும். பாதங்கள் அழகு படும். இதை முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் பருக்கள் தழும்புகள் இல்லாமல் நீங்கும்.
 
உடல் பருமன் குறைய விரும்புபவர்கள் எந்தவிதமான பயிற்சியும் உணவுகட்டுப்பாடும் இல்லாமல் குறைய விரும்பினால் அவர்களுக்கு பப்பாளி காய் உதவும்.
 
உடல் எடை எப்போதும் அதிகரிக்காமல் இருக்க விரும்புபவர்களும் வாரம் ஒரு முறை பப்பாளிக்காயை கூட்டு அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எடை கட்டுக்குள் இருக்கும். அதிக எடையை கொண்டிருப்பவர்கள் உடல் எடை குறைவதை பார்க்கமுடியும்.