வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஜீரண கோளாறுகளை சரிசெய்யும் அற்புத மருத்துவகுணம் நிறைந்த ஓமம் !!

ஓமத்தில் கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபிளோவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் ஓமத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் பசியின்மை நீங்கி இயல்பாக பசி எடுக்கும். நன்றாக  சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
 
ஓமத்தில் ‘தைமோல்’ என்னும் வேதிபொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது. தினமும் தவறாமல் ஓம  தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் அண்டாது. 
 
வயிற்றில் கோளாறு இருந்தாலோ, வயிற்றில் அடிக்கடி சத்தம் வந்தாலோ, ஓமத்தையும் சீரகத்தையும் வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, தினமும்  சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
 
மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, என மூன்றையும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து  அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
 
ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் போன்றவற்றின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து  காலை, மாலை சாப்பிட்டு  வந்தால் தொண்டை கட்டு, தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.