வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கண் பகுதியில் ஏற்படும் கண்கட்டியை போக்க சில குறிப்புகள்...!!

உடலில் அதிகப்படியான சூடு, நீர் பற்றாக்குறை ஊட்டச்சத்து குறைவு, சுகாதாரம் இல்லாமல் இருப்பது இது போன்ற பல காரணங்களினால், கண்களில் கண்கட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.மேலும் வெயிலின் கடுமையான தாக்கத்தால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்.  இதனால் கண் கட்டி உண்டாக வாய்ப்புள்ளது. 
கண்ணின் இமை மற்றிம் கீழ் பகுதியில் வரும் கட்டி கண்ணில் வலி மற்றும் உறுத்தலை உண்டாக்கும். இதனை போக்க இயற்கையான  முறையில் சில தீர்வுகளை பார்ப்போம்.
 
பாலாடை எடுத்து அதனை கண்கள் மீது தடவி, சிறிது நேரம் கழித்து காய்ந்ததும் பாலினால் கண்களை துடைத்து பின் வெதுவெதுப்பான நீரில்  கண்களை நன்கு கழுவவேண்டும்.
 
அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் வராது. மேலும்  அகத்திக் கீரையை அரைத்து அதை தலையின் உச்சியில் ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் உடல் சூடு குறையும்.
முருங்கைக் கீரையை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடைவதுடன் கண்கட்டி வராமலும்  தடுக்கலாம்.

மஞ்சள் ஒரு கிருமி நாசினி. எனவே மஞ்சள் கலந்த தண்ணீரில் ஒரு வெள்ளை துணியை நனைத்து பிழிந்து கண்ணில் துடைத்து வர கண்ணில் எந்த கிருமிகளும் வராமல் தடுக்கப்படும்.
 
உருளை கிழங்கு தோளை சீவி அதனை கண்களில் சில மணி நேரம் வைத்தால் கட்டி கரையும். வெந்நீர் உப்பு கலந்து அந்த நீரை கொண்டு  கண்களில் ஒத்தடம் கொடுக்கலாம்.