செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தக்காளியில் உள்ள சத்துக்களும் பயன்களும்...!!

தக்காளியில் வைட்டமின் ஏ, சி அதிகமாக உள்ளது. இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.
தக்காளியில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். உடல் வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ள தினமும் அதிகளவு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
 
ஆண்கள் தினமும் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால் 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தைக் குறைக்கலாம். வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
 
தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். மற்றும் இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற  பிரச்சனைகளுக்கு மருந்தாகும்.
 
தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தக்காளியில் பீட்ட கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை தருகிறது.
 
கைகளில் ஏதேனும் வெட்டு காயங்கள் ஏற்பட்டால் உடனே பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட காயத்தில் வைத்தால் ஆன்டி செப்டிக்காக  செயல்படும்.
 
தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகின்றது. அதுமட்டும் இல்லாமல் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது.