செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாழைத்தண்டில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்....!!

வாழைத் தண்டில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், நம்முடைய குடலுக்குள் தேங்கியிருக்கும் மணல், கற்களை வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.

சரியாக சிறுநீர் வராமல், அல்லது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகிறவர்கள் அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து வந்தால் சிறுநீர் பிரிவது எளிதாகும். மலச்சிக்கல் பிரச்னையும் தீரும்.
 
நரம்புத் தளர்ச்சியை சரிசெய்யும் ஆற்றலும் வாழைத்தண்டுக்கு உண்டு. தினந்தோறும் வாழை தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தீர்கள் என்றால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் குணமாகும்.
 
காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த சுத்திகரிப்பு போன்ற பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு கப் வாழைத்தண்டு சூப் குடித்து வாருங்கள்.
 
மஞ்சள் காமாலை இருப்பவர்கள் வாழைத்தண்டை நன்கு வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதில் ஒரு ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை தீரும்.
 
தீக்காயங்கள் வெகுநாட்களாக ஆறாமல் இருந்தால், வாழைத்தண்டை எடுத்து நெருப்பில் சுட்டு, அந்த சாம்பலை எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து  குழைத்துத் தடவுங்கள். எப்படிப்பட்ட தீக்காயமும் ஆறிவிடும்.