Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிவி பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!!

Written By Sasikala
Updated: வெள்ளி, 29 மே 2020 (11:44 IST)

கிவி பழம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. கிவி பழம் உடலின் நீர்ச்சத்து மற்றும் pH அளவை கட்டுப்படுத்தவும் செய்யும். அதோடு உடலின் நரம்பு செல்கள் மூளையுடன் தொடர்பு கொள்ளும் திறனை அமினோ அமிலங்கள் மேம்படுத்தும். 
 
கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தைக்  குறைக்கும். 
 
கிவிப் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைத் தடுக்கும்.
 
கிவி பழம் ஆஸ்துமாவை சரிசெய்யும் திறன் கொண்டது. இதற்கு இதில் உள்ள வைட்டமின் சி தான் காரணம். ஆய்வுகளில் கிவி பழத்தை வாரத்திற்கு 1-2  சாப்பிடுவதன் மூலம், சுவாச நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.
 
இந்த பழம் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், இரவில் வரும் வறட்டு இருமல் போன்றவற்றை சரிசெய்து, நுரையீரலின் செயல்பாட்டிற்கு உதவும். முக்கியமாக  ஆஸ்துமா நோயாளிகளுக்கு கிவி பழம் மிகவும் நல்லது.
 
கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. போலிக் அமிலம் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்தாகும்.
 
கிவி பழத்தை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கிவி மிகச்சிறப்பான பழம்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments