1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உலர் பேரிச்சம்பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும் !!

உலர் பேரிச்சம்பழத்தில் கனிமச்சத்துக்கள் உள்ளன. இவை எலும்புகளை வலிமையாக்க மற்றும் எலும்பு தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இவற்றில் மாங்கனீசு, காப்பர், கால்சியம், மக்னீசியம் போன்றவை வளமான அளவில் உள்ளது.

உலர் பேரிச்சம்பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதில் சிறந்தது.  பாலில் உலர்ந்த பேரிச்சையை ஊறவைத்து சாப்பிடுங்கள். இது மூளையின் ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக பேரிச்சம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மூளையை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன.
 
உலர் பேரிச்சையில் கொழுப்பு குறைவாகவும், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், இது இதயத்திற்கு சிறந்த உணவாக அமைகிறது. உலர் பேரிச்சையை தொடர்ந்து உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
 
 உலர் பேரிச்சையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான மற்றும் திறம்பட பதிலளிக்கக்கூடிய நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. மேலும் இது தூக்க சுழற்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
 
உலர் பேரிச்சையில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது ஆண்களின் ஸ்டாமினாவை அதிகரிக்கும். அதுவும் பாலில் உலர் பேரிச்சையைப் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டால், உடல் அதிலிருந்து நிறைய நன்மைகளைப் பெறும்.
 
சுவாச அமைப்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், பாலுடன் உலர் பேரிச்சையை சேர்த்து சாப்பிடுங்கள். ஏனெனில் இப்படி சாப்பிடுவது சுவாச ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி புரிவதாக நம்பப்படுகிறது.
 
உலர் பேரிச்சையை பாலுடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகையில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் பேரிச்சை பெரிதும் உதவும்.  மேலும் இது இது எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமையை இன்னும் அதிகரிக்கிறது.