செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (13:18 IST)

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள சத்துக்களும் நன்மைகளும் !!

ஸ்ட்ராபெரி மிகவும் சத்தான பழமாகும். அன்னாசிப்பழங்களைப் போலவே, இது லேசான புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது.

ஸ்ட்ராபெர்ரி பழங்களைஜெல்லிகளின் வடிவத்திலும் கிடைக்கிறது. ஸ்ட்ராபெரியானது ஐஸ்கிரீம், மில்க் ஷேக்ஸ் மற்றும் ஜாம் போன்ற பலவகையான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
 
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது உடலில் சோடியத்தின் விளைவுகளை கட்டுப் படுத்துகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. 
 
ஸ்ட்ராபெரி ஜூஸ் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. ஸ்ட்ராபெரி சாற்றில் 90% வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
 
நோயெதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத வைட்டமின் சி யை கொண்டுள்ளது. இது தவிர, இவற்றில் இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இந்த தாதுக்கள் அனைத்தும் உங்கள் முடி உதிர்வதைத் தடுக்க உதவும்.
 
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அத்தியாவசிய தாதுக்கள் ஆகும். இவை இரண்டும் இரத்த சோகை மற்றும் குறைப்பிரசவத்தைத் தடுக்கின்றன.
 
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் கனிசமான அளவு  வைட்டமின் சி உள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.