ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பலாப்பழத்தில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!

பழங்களில் மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகள். "பலாப்பழம்" சாப்பிடுவதால் பலவித நன்மைகள் ஏற்படுகின்றன. பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது. 

கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை வைட்டமின் "ஏ" சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. பலாப்பழம் சாப்பிடுவதால் கண்பார்வை  சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். 
 
தைராய்டு என்பது நமது தொண்டையில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு செம்பு சத்து அதிகம் நிறைந்த பலாப்பழத்தை சாப்பிடலாம்.
 
குழந்தைகள், பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள் ஆகியோர் பலாப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைகிறது. 
 
நமது உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைவால் ரத்த சோகை நோய் அல்லது குறைபாடு ஏற்படுகிறது. பலாப்பழத்தில் வைட்டமின் ஏ,  சி, ஈ, கே மற்றும் மக்னீசியம், செம்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.
 
பலாப்பழம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் சோடியம் உப்பின் அளவு சரியான அளவில் இருந்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க  உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தம் அதிகம் ஆகும் போது வரும் இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.