செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நரம்பு சம்பந்தமான குறைபாடுகளை கொண்டவர்களுக்கு அற்புத நிவாரணம் தரும் ஜாதிக்காய் !!

ஜாதிக்காயை நன்கு தூளாக அரைத்து கொண்டு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பசும்பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் கொண்டவர்களுக்கு அது நீங்கும். 

குழந்தைகள் மருத்துவம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்த ஜாதிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு குழந்தைகளுக்கு அவ்வப்போது வயிற்று போக்கு ஏற்படும் அப்போது இந்த ஜாதிக்காய் தூளை மிகவும் குறைந்த அளவில் பசுப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்று போக்கு குணமாகும்.
 
குழந்தைகளை தூங்க வைக்க இதை தினந்தோறும் எல்லாம் தரக்கூடாது. அதோடு இதை அதிக அளவிலும் குழந்தைகளுக்கு நிச்சயம் தர கூடாது. ரத்த சுத்தி ஜாதிக்காய் சற்று அமிலத்தன்மை மிக்க ஒரு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காயாகும்.
 
எனவே இதை அவ்வப்போது பாலில் கலந்து உட்கொள்ள ரத்தத்தில் உள்ள விஷ கழிவுகளை நீக்கி, கெட்ட கொழுப்பு படிவதை தடுத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூடுகிறது. 
 
வயிற்று பிரச்சனைகள் நாம் உண்ணும் உணவை நன்றாக செரிமானம் ஆக வயிறு குடல் மற்றும் இதை செரிமான உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு வாயு கோளாறுகள், அஜீரணம், வயிற்றில் அமில சுரப்பு கோளாறுகள் போன்றவற்றால் அவதியுறுகின்றனர். இவர்கள் ஜாதிக்காய் தூளை சிறிது பால் அல்லது பால் கலக்காத தேநீருடன் அருந்தி வர இப்பிரச்சினைகள் நீங்கும்.
 
ஆண்கள் தினமும் இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை அரைத்து, பசும்பாலில் கலக்கி அதனுடன் சிறிது ஜாதிக்காய் தூளை சேர்த்து ஒரு மண்டலம் அல்லது 48 நாட்கள் அருந்த நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மை நீங்கும்.