செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (16:50 IST)

நிலச்சரிவில் பலியானவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

மஹராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

கோடைக்காலம் முடிந்து தற்போது இந்தியாவில் மான்சூன் எனப்படும் மழைக்காலம் தொடங்கியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில்  கன பெய்து வருவதால், அங்குள்ள ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சிக்கி சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர்  குவியல்களில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

பேரிடர் மீட்புக் குழுவினர் மக்களை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் ; நிலச்சரியில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.