புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் நேத்திரப்பூண்டு !!

நேத்திரப் பூண்டு நான்கு நான்கு இலைகளாக இருக்கும். நேத்ர பூண்டு, சோம நேத்ர புஷ்ப குழி, நேத்ர மூலி, நேத்திரஞ்சிமிட்டி மற்றும் ஒட்டி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

நேத்திர பூண்டு தரையோடு படரும் கொடி வகையை சார்ந்தது. இதில் நான்கு இலைகள் கூட்டாக காணப்படும், இலைகள் ஒடிய கூடியது, இலைகள் மனித கண்களை போலவே காணப்படும். இலைகளே மருத்துவ பயனுடையது.
 
இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊறவைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.
 
நேத்திர பூண்டு தைலம் செய்ய:
 
நேத்திர பூண்டு தைலம் தயாரித்து கண்ணோய்க்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். நேத்திர மூலிகை இலை 250 கிராம் அளவு எடுத்து அதை நன்றாக நறுக்கி ஒரு வெள்ளை துணியில் மூட்டையாக கட்டி சுத்தமான பாத்திரத்தில் போட்டு அதில் 500 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி பாத்திரத்தின் வாய் பகுதியை துணியால் இறுக  கட்டி தினமும் வெய்யில் படும்படி 15 நாள் வைக்கவும். இதை வெய்யில் புடம் போடுதல் என்று கூறுவர். சுத்தமான துணியால் வடி கட்டி கை படாமல்  வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பினால் சூடுபடுத்த கூடாது மூலிகை தன்மை இழந்து விடும்.
 
மருத்துவ பயன்கள்:
 
தயாரித்த நேத்திர பூண்டு தைலத்தை தினமும் காலை, மாலை 2 சொட்டுக்கள் வீதம் விட்டுவர கண் பார்வை மங்கள், கண் எரிச்சல், கண்சிவப்பு, பீளை கட்டுதல்,  வெள்ளெழுத்து, கண்ணில் பூவிழுதல், கண்ணில் சதை வளருதல் (கண் புரை), பார்வைகுறைவால் ஏற்படும் ஒற்றை தலைவலி ஆகியவை குணமாகும்.
 
இதன் இலையை மை போல் அரைத்து அடிபட்ட கை, கால் இணைப்பு பகுதிகளில் ஒரு முறை தடவ வலி குணமாகும், உடைந்த ஜவ்வு கூடும்.