செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பொடுகு தொல்லையை போக்க உதவும் வேப்ப இலை !!

வேப்ப இலை இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. அதனால் வேப்பம் இலையை வைத்து பொடுகை எப்படி விரட்டுவது  என்று பார்க்கலாம்.

வேப்பம் இலைகளை எடுத்து வந்து பானை ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்ததும் இறக்கி வைய்யுங்கள் மூடியை  திறக்க வேண்டாம். வழமை போல் நீங்கள் குளித்து முடித்தபின் தலையை வேப்பம் இலை அவித்த நீரில் நன்றாக கழுவுங்கள். உடலோடு சேர்த்து கழுவினால் கூட  எந்த பிரச்சனையும் இல்லை.
 
நன்றாக தலையை வேப்பம் இலை அவித்த நீரில் கழுவி விட்டு துண்டு ஒன்றினால் தலையை கட்டிக் கொள்ளுங்கள். 1 மணி நேரத்தின் பின் துண்டை கழட்டி  விடலாம். அடுத்த நாள் வரை தலை குளிக்க கூடாது. இப்படி இரண்டு நாள் செய்தாலே பொடுகு ஓடி விடும். அத்துடன் பேன், ஈறு போன்ற தொல்லைகளும்  இருக்காது. 
 
வேப்பிலையை அரைத்து அல்லது வேப்பிலை பொடியில் எலுமிச்சை சாறு பிழிந்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதை தலையின் வேர்களில் படும்படி தடவி 30  நிமிடங்கள் காய விடுங்கள். பின் தலைக்குக் குளித்துவிடுங்கள்.வாரம் இரண்டு முறை செய்யலாம்.
 
வேப்ப இலையை காயவைத்து தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் செம்பருத்தி பூ வையும் காயவைத்து தூளாக்கிக் கொள்ளுங்கள். இதில் ஒரு கரண்டி  வேப்பம் இலை தூள், ஒரு கரண்டி செம்பருத்தி பூ தூள் இரண்டையும் மிக்ஸ் செய்து இதனுடன் தயிர் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து,  தலையில் வைத்து மசாஜ் செய்யுங்கள். பின்பு சிறிய துணியால் கட்டிவிடுங்கள். முப்பது நிமிடம் கழித்து நன்றாக குளியுங்கள். இப்படி ஒரு வாரம் செய்தால்  பொடுகு தொல்லை நிரந்தரமாக வராது.