வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (11:15 IST)

பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள வேப்பம் பூ !!

கிருமி நாசினியான வேப்பம் பூவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம் இது நல்ல பலன் கொடுக்கும்.


குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை குணமாகும். வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் இவற்றைக் குணமாக்கலாம். வேப்பம் பூவை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து சாப்பிட்டால் வாந்தி ஏப்பம் நீங்கும்.

கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். தோல் சம்மந்தப்பட்ட சொறி, சிரங்கு முதலானவற்றைக் குணமாக்கும். வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம்.

ஜீரணத்தை அதிகரித்து பசியைத் தூண்டும். பித்தத்தைப் போக்கும். இதற்கு வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். உடல் எடையை குறைக்கும். வேப்பம் பூவை ஒரு கைப்பிடி எடுத்து அதனை நீரில் ஊறவைத்து பின்னர் அந்நீரை தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

குடலில் உள்ள கிருமிகள் மற்றும் குடற் புழுக்களை அழிக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் வேப்பம் பூவைக் கஷாயமாக வைத்துக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மலேரியா காய்ச்சலைக் குணமாக்கும். வேப்பம் பூ உடலிலுள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழிக்கும் திறன் கொண்டது.

நீண்ட நாள் வாயுத் தொல்லையைப் போக்கும். வேப்பம் பூக்களை மென்று தின்றால் இப்பிரச்சினை விரைவாகக் குணமடையும். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். சிறிதளவு வேப்பம் பூவுடன் இரண்டு அல்லது மூன்று மிளகாய் வைத்து அரைத்து சுண்டக்காய் அளவு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் வயிற்றுக் கிருமிகள் செத்து மலத்துடன் வெளியேறிவிடும்.