1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இயற்கையான முறையில் சத்துக்கள் நிறைந்த இளநீர்

நமக்கு இயற்கை வழங்கியுள்ள ஒரு அற்புத பானம் இளநீர். இதனை முறையாக பருகினால் வாத, பித்த, வெப்பம் ஆகியவை நீங்கும். இளநீர் வழுக்கையுடைய  புதிய இளநீராக இருக்க வேண்டும். அதுவே இளநீராக இருப்பின் ஜலதோஷத்தை உண்டாக்குவதுடன் சீதள சம்பந்தமான நோய்களை உண்டாக்கும்.
இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள்  நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இளநீர் மிகவும் உதவுகிறது. 
 
இளநீர் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை நீக்குகிறது. இது உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்ச்சியாக வைக்கிறது.
 
இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் மன அழுத்தத்தை நீக்கி நல்ல உறக்கத்தை தரும். கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டையும் அதனால் ஏற்படும் வயிற்றுக் கோளாரையும் நீக்குகிறது.
காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இது உடலுக்கு ஊக்கமும் சத்தும் தரும். தோல் பளபளப்பாகவும், சிவப்பாகவும் மாற தினமும் இளநீரை குடிக்க வேண்டும். கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் முடி, நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது. இளநீர் இளமையைக்  காக்கும் அரிய பானமாகும்.
 
இதில் சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில்  உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. மந்தம், உணவு செரியாமை போன்றவற்றிக்கு இது மருந்து மற்றும்  சிறந்த உணவும் ஆகும்.
 
காலரா நோயாளிகள் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும். பித்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து  நிறைந்த மருந்து ஆகும்.
 
இது சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். மற்றும் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காலரா நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது.