சளி மற்றும் இருமலை விரட்டும் இயற்கை மருந்து...!

Updated: வெள்ளி, 25 ஜனவரி 2019 (10:42 IST)
 
ஜலதோஷம் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகம் படுத்திவிடும். மூக்கை சிந்திக்கொண்டு அல்லது தொண்டை கட்டிக்கொண்டு,  அவஸ்தையில் தவிர்ப்பதும், அதனால் உண்டாகும் சிரமங்களும் பல. மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், உடலில் இயற்கையாகவே  உள்ள நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக, ஒரு வாரத்தில் சரியாகிவிடும்தான்.
 
ஜலதோஷத்தை போக்க மிக எளிமையான தீர்வு உண்டு. மூலிகை மருந்துக்கடைகளில், திரிகடுகம் என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும்,  அதை வாங்கிக்கொள்ளுங்கள், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த  மருந்தாகும்.
 
உடலின் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும் அருமருந்தாக விளங்கும், இதன் பலன்கள் ஏராளம். இதனை தேநீர் தயாரித்து  ஜலதோஷத்தை எவ்வாறு போக்குவது என்பதை பார்ப்போம். 
 
தேநீர் செய்ய:
 
இப்படி அரும்பெரும் ஆற்றல் கொண்ட, திரிகடுக சூரணத்தை இரு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில், மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி,  நன்கு கொதித்து மூன்று டம்ளர் என்ற அளவிலிருந்து, ஒரு டம்ளர் என்ற அளவுக்கு வரும்வரை, சுண்டக் காய்ச்ச வேண்டும். அதன்பின் அந்த  நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சற்று சூடு தணிந்த பிறகு, சிறுகச் சிறுக பருகி வரவேண்டும். இதுவே திரிகடுக தேநீர் ஆகும்.
 
நன்மைகள்:
 
சித்த வைத்தியத்தில், சுண்டக் காய்ச்சி பருகுவது என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு நோய் தீர்க்கும் முறையாகும், அதன் அடிப்படையில், நாம் பருகி வரும் இந்த திரிகடுக தேநீர் ஜலதோசத்தை போக்கும், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகினாலே, ஜலதோசம் நீங்கி,  உடல் நிலை சரியாகிவிடும்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments