பெண்கள் திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவதன் காரணம்...?

பெண்ணுக்கு பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது மெட்டி. திருமணம் ஆனதும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும், என்று பெரியோர்கள் சொல்லி வைத்ததற்கு  காரணம் உண்டு.
கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான், கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது  அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை  அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு  ஸ்தானம் உள்ளன.
 
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில்  வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி, நோய்களுக்கு நிவாரணம் தரும்  ஆற்றல் உள்ளதாக கூறப்படுகிறது.
 
பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும்  வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :