வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சொரியாசிஸ்க்கு எளிய தீர்வு தரும் மருத்துவ முறைகள்...!

சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை மற்றும் சிவப்பு திட்டுகளாக காணப்படும். உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய  பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்  சூரை, சால்மன்,  கானாங்கெளுத்தி மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் மற்றும் எள்ளு விதைகளில்  ஏராளமாக உள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சொரியாசிஸ் நிலைமையை தீவிரமாக்காமல் குறைக்க உதவும். 
 
சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது  அவசியம்.தோலைச் சொரிய கூடாது. ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்து விளைவுகள் தெரிய பல வாரங்கள் ஆகும். இதனால்  சிகிச்சையை இடையில் நிறுத்த கூடாது.  
மருந்துகளை தொடர்ந்து சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது  நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும். சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம்  இருப்பதால் வேர்க் குருக்கள் உண்டாகும். இதனால் சொரியாசிஸ் தீவிரமடையும். ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு வகைகளை தவிர்க்க  வேண்டும்.
 
வீட்டு வைத்தியம்:
 
அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து  வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். இவை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறிய  பிறகு சீயக்காய் தூளுடன் கருஞ்சீரகம் தூள் கலந்து குளித்து வரவேண்டும். இந்த வைத்தியம் பக்க விளைவுகள் அற்றது.
 
தவிர்க்க வேண்டியவை:
 
சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் இறைச்சி மற்றும் முட்டை மற்றும் ஆல்கஹால் குடித்தால், சாதாரணமானவர்களை விட சொரியாசிஸ்  பிரச்சனை இருப்பவர்களின் இரத்தத்தில் ஆல்கஹால் அளவு மிகவும் அதிகமாகிவிடும். இதனால் கடுமையான அரிப்பை சந்திக்க நேரிடும்.