செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பித்த வெடிப்பை சரிசெய்ய உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

ஆரம்ப நிலையில் உள்ள பித்த வெடிப்பைக் குணப்படுத்த, ஈரத் தன்மையைத் தரும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், லிக்விட் பாரபின் எண்ணெய் போன்றவற்றில் ஒன்றை காலிலும் பாதங்களிலும் தடவலாம்.

பித்தவெடிப்புகளை ஆரம்பத்திலேயே கவனித்து தகுந்த சிகிச்சை பெற்றுக் கொண்டால், விரைவில் குணமாகும். காலம்தாழ்த்தினால், வெடிப்புகள் சருமத்தையும் தாண்டி ஆழமாகச் சென்று விடும். அல்லது அவற்றில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் தொற்றிக் கொள்ளும்.
 
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின் தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில்  பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.
 
வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு முழுவதும்  குணமாகும்.
 
இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாகத் தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் நீங்கள் தடுக்கலாம்.
 
குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின்பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
 
காலணிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் பித்த வெடிப்புக்கு ஒரு காரணமாகலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால், இந்த வெடிப்புகள் நிரந்தரமாகவே தொல்லை கொடுக்கும். 
 
உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருந்தாலும், தைராய்டு சுரப்புக் குறைபாடு, சொரியாசிஸ் நோய் போன்றவை இருந்தாலும் இதே நிலைமைதான். பனிக்காலத்து இரவுகளில், ஈரப்படுத்தும் களிம்புகளைப் பாதங்களில் பூசிக் கொண்டு, காலுறைகளையும் அணிந்து கொள்ள வேண்டும்.