1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

புற்று நோய் பாதிப்பை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்....!

புற்று நோய் வந்து விட்டால் அவ்வளவுதான், வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று மனம் தளர்ந்து, ஒடுங்கிப்போய் விடுவார்கள். தற்போது ஓரளவுக்கு மருத்துவ உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து, குணப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்ற  நிலை உள்ளது.
புற்று நோயை படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் உள்ளது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த  மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ என்பவர். இவர் கண்டுபிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட  உபயோகித்து குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
 
தேவையான பொருட்கள்: சோற்று கற்றாழை 400 கிராம், சுத்தமான தேன் 500 கிராம், விஸ்கி அல்லது பிராந்தி (whisky(or)brandy) 50 மி அளவு  (மருந்தாக மட்டும் பயன்படுத்துக).
 
தயாரிப்பு முறை: சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான  துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்.  இப்போது மருந்து தயாராகி விட்டது.
 
மருந்தை உட்கொள்ளும் விதம்: இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மி.லி. வீதம் உண்ணவேண்டும்  ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து  வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை சேகரித்து வைக்க கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து  ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.
 
இந்த மருத்துவம், புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்தரும் என்பதால் பகிரப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை  தெரியப்படுத்துங்கள்.