புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (05:32 IST)

தலைமுடி நன்றாக வளர இயற்கை முறையிலான அழகு குறிப்புகள் !!

தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வர அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.


கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கக் கூடிய பொருட்களில் முக்கியமானது விளக்கெண்ணெய். வாரம் 1-2 முறை விளக்கெண்ணெய்யை தடவி மசாஜ் செய்து குளித்தால் கூந்தல் உதிர்தல் குறைந்து அதன் வளர்ச்சி அதிகரிக்கும். முடி அடர்த்தியாக வளரும்.
 
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்  இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
 
எலுமிச்சை பழ சாறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வு குறைய தொடங்கும். செம்பட்டை முடி கருமை அடையும்.
 
கிரீன் டீயில் பாலிபினால்கள் நிறைந்துள்ளன, அவை கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். கிரீன் டீயில் உள்ள பயோஆக்டிவ் கலவைகள் சரும பாப்பிலா செல்களில் பெருக்க விளைவை ஏற்படுத்தும் மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
 
வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிர்வு குறைந்து அடர்த்தி அதிகரிக்கும்.
 
கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளில் முடி வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கொட்டைகள் மற்றும் விதைகள் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, அவை முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவும்.