1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (17:57 IST)

உடலுக்கு வலிமை தருகின்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த மூங்கில் அரிசி !!

மூங்கில் அரிசி பச்சை நிறம் கொண்டது. இனிப்பு சுவை கொண்ட மூங்கில் அரிசி உறுதியானது மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. நமது உடலில் தோன்றும் வாத, பித்த, கப தோஷங்களை சரி செய்வதுடன் உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.

மூங்கில் அரிசி உடலுக்கு வலிமை தருகின்ற அரிசி வகைகளில் இதுவும் ஒன்றாகும். நாம் வழக்கமான அரிசியில் செய்யும் அத்தனை உணவுகளையும் இந்த மூங்கில் அரிசியிலும் செய்ய முடியும்.
 
மூங்கில் அரிசியில் ஏராளமான கலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின், போன்ற உடலுக்கு தேவையான கனிமசத்துக்கள் நிறைந்துள்ளது.
 
மூங்கில் அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
 
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது. எனவே கர்ப்பமான பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிட செய்யலாம்.
 
மூங்கில்  அரிசியை சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் வலு பெரும். இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.