செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய்களுக்கு அற்புத மருந்தாகும் மூலிகை அம்மான் பச்சரிசி !!

அம்மான் பச்சரிசி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது. குளிர்ச்சித் தன்மையானது. அம்மான் பச்சரிசி பால் ஒரு அரிய மருந்தாகும். 

அம்மான் பச்சரிசி பாலை முகத்தில் தடவ, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும். காலில் பூசிவர, கால் ஆணி, பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு  ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள் ம‌ருந்தாகக் கொடுக்க இரைப்பு குறையும்.
 
அம்மான் பச்சரிசி குடல் புழுக்களைக் கொல்லும், உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும், மலமிளக்கும், சுவாசத்தைக் சீராக்கும், இருமலைக் தணிக்கும், பெண்களுக்குப் பால் சுரப்பதைத் தூண்டும், பால் மருக்களைக் குணமாக்கும்.
 
அம்மான் பச்சரிசி சிறு செடி வகையைச் சார்ந்தது. தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் மற்றும் ஈரப்பாங்கான சமவெளி நிலங்களில் சாதாரணமாகக் காணப்படும். ஆண்டு முழுவதும் பரவலாகக் காணப்படுபவை. 50 செ.மீ. வரை உயராமாக வளரும்.
 
அம்மான் பச்சரிசி இலைகள் எதிரெதிராக அமைந்தவை, சொரசொரப்பானவை. பச்சை, சிவப்பு நிறங்களில் இலைகள் காணப்படும். சிறுபூக்கள் தொகுப்பாக கணுக்களில் அமைந்திருக்கும்.
 
அம்மான் பச்சரிசி பூக்கள் வெண்மையாகவும், காம்புகளுடன் காணப்படும். தாவரத்தில் எப்பகுதியைக் கிள்ளினாலும் பால் வடியும். அம்மான் பச்சரிசிக்கு சித்திரப்  பாலாடை என்கிற பெயரும் உண்டு.