1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (15:21 IST)

கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் நந்தியாவட்டை !!

Nandiyavattai
நந்தியாவட்டை மலர்கள், நுனியில் தொகுப்பாக அமைந்தவை. வெண்ணிறமானவை. 5 இதழ்களுடன் கூடியவை. மலர் இதழ்கள் தட்டு போன்று விரிந்தவை. திருகு இதழ் வடிவமானவை. ஆண்டு முழுவதும் பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கும்.


நந்தியாவட்டை அழகுச் செடியாகவும், இதன் மருத்துவப் பயன்பாட்டிற்காகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. அடுக்கிதழான மலர்களைக் கொண்ட நந்தியாவட்டையும் உண்டு. ஆனால் 5 இதழ்களைக் கொண்ட பூக்களே மருத்துவத்தில் பயன்படுவதாகும்.

நந்தியாவட்டை பூ இதழ்களிலிருந்து சாறு எடுத்து சம அளவு தாய்ப் பாலுடன் கலந்து 2 துளிகள் கண்ணில் விட கண் சிவப்பு குணமாகும்.

நந்தியாவட்டை பூவால் ஒற்றடம் கொடுக்க வேண்டும். அல்லது 2 துளி பூச்சாற்றை கண்ணில் விட கண் எரிச்சல் குணமாகும். பல்வலி குணமாக ஒரு துண்டு வேரை வாயிலிட்டு 10 நிமிடங்கள் நன்கு மெல்ல வேண்டும். பிறகு துப்பி விடலாம்.

நந்தியாவட்டை வேர் ஒரு துண்டை நன்கு நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு அரை டம்ளர் அளவாக காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

நந்தியார்வட்டைச் செடி இருவகைகளில் காணப்படுகின்றன. இருவகையும் பித்த சூட்டைக் குறைக்கும் தன்மையுடையவை. புண்களை சுத்தப்படுத்தி ஆறவைக்கும். பூக்களை இரவில் கண்களில் கட்டி, மறு நாள்காலை எடுத்து விடுதலின் கண்கள் குளிர்ச்சியடைகின்றன.

பூக்களை சுத்தமான தண்ணீரில் இடித்து சாறு பிழிந்து கண்களில் விடுவதால் கண்நோய்கள் நீங்கி கண்பார்வையும் நன்றாக இருக்கும்.