1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (12:07 IST)

எப்படியெல்லாம் நெல்லிக்காயை பயன்படுத்தி ஆரோக்கியம் பெறலாம்...!!

Gooseberry
நெல்லிமரத்தில் பெருநெல்லி மற்றும் சிறுநெல்லி என இருவகையுண்டு. சிறுநெல்லியை விட பெருநெல்லி அதிக மருத்துவகுணம் கொண்டது.


நெல்லிமரக்காற்று ஆரோக்கியமானது. இன்றைக்கும் நெல்லி மரப்பட்டைகளை உப்பு, துவர்ப்பு உள்ள கிணறுகளில் போட்டு வைப்பார்கள். உப்பு மற்றும் துவர்ப்பு உள்ள நீரை சுவையாக மாற்றும் தன்மை நெல்லிப்பட்டைக்கும் நெல்லிக்காய்க்கும் உண்டு. தண்ணீர் பானைகளில் கூட நெல்லிக்காய் அல்லது நெல்லிப்பட்டைகளை போட்டு வைத்தால் நீர் சுவையுடன் இருக்கும்.

வாய்ப்புண், தொண்டைப்புண்களுக்கு நெல்லிக்கனி அருமருந்தாக வேலை செய்கிறது. தொடர்ந்து வரும் சளி தும்மலுக்கு நெல்லிக்கனி சாறு தொடர்ந்து அருந்திவர படிப்படியாக சளித்தொல்லை குறையும்.

இதய பலவீனம், உயர இரத்த அழுத்தத்திற்கும், மாரடைப்பு வந்தவர்கள் நெல்லியை தைரியமாக தினமும் ஒன்று வீதம் சாப்பிடலாம். பசியின்மை, வயிறு, குடல் புண்கள், தோல் நோய்கள், சொரி, புண்கள், மேகவெட்டை, நீரிழிவு, நீர்ச்சுருக்கு (சிறுநீர் சரிவர வராமல் இருப்பது) போன்றவற்றிற்கு நெல்லிக்காய் மிகவும் நல்லது.

நெல்லிக்கனியை உலர்த்தி பொடி செய்து அந்த பொடியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து குளித்துவர சருமம் மினுமினுக்கும், சரும நோய்கள் அண்டாது. வறட்சியான சருமம் உள்ளவர்கள் நெல்லிப்பொடியுடன் பயித்தம் மாவை கலந்து பூசிவர சருமம் பொலிவுடன் திகழும்.

நெல்லிக்காய்க்கு ஜீரண உறுப்புகளை நன்றாக செயல்படவைக்கும் ஆற்றல் உள்ளது. சிறுநீர் எரிச்சல், ஆகார வாய் எரிச்சல், சிறுநீர் அழற்சி, சர்க்கரை நோய், வயிறு எரிச்சல் போன்றவற்றை அவரவர் உடல்நிலைக்கேற்ப குணமாக்கும், தாகத்தை தணிக்கும்.

நெல்லிக்கனியை உலர்த்தி உலர்ந்த நெல்லியை ஆண்டு முழுவதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். நெல்லியிலிருந்து தைலம் எடுத்து தலைக்குத் தடவிவர தலையின் உறுப்புகளான கண், காது, மூக்கு ஆகியவற்றிற்கும் மூளை, நரம்பு மண்டலங்கள் ஆகியவற்றிற்கும் குளிர்ச்சி தரும்.