குழந்தைகளின் ஞாபக சக்தியை பெருக்க என்ன செய்யலாம்...?

குழந்தைகள் படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வழியிருக்கிறது. நினைவுத்திறனை பயிற்சியின் மூலம் அதிகரிக்க  முடியும். 
ஞாபக சக்திக்கு காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையை சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை  சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக நினைவுக்கு கொண்டுவந்துவிடும்.
 
மூச்சுப் பயிற்சிதான் எளிய வழி. யோகா முறையில் இதை பிராணயாம பயிற்சி செய்யலாம். முதலில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியிடுங்கள். பத்து அல்லது இருபது முறை இப்படி செய்துவிட்டு, பிறகு ஒற்றை நாசித் துவாரத்தை மூடிக்  கொண்டு மற்றொரு நாசியின் வழியே காற்றை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிடவும். இதுபோல சில முறைகள் செய்தபிறகு, அந்த  துவாரத்தை மூடிக்கொண்டு பின்னர் மற்றொரு துவாரம் வழியே மூச்சுப் பயிற்சி செய்யவும்.
 
மாணவர்கள் தினமும் காலை, மாலையில் 20 நிமிடம் இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், மூளைக்கு போதுமான அளவில்  ஆக்சிஜன் கிடைத்து சுறுசுறுப்பாக செயல்படும். உடலும் புத்துணர்ச்சியுடன் இயங்குவதை காண்பீர்கள்.
 
பிராணயாமம் போலவே மற்றொரு விளையாட்டு பயிற்சியும் நினைவுத் திறனை வளர்க்கும். இந்தப் பயிற்சியை எண்களோடு சேர்த்து பயிற்சி செய்து நினைவுத் திறனை மேம்படுத்தலாம்.
 
ஞாபக சக்தி பெருக செய்யவேண்டியவை:
 
வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு சரியான நேரத்திற்குத் தூங்கச் செல்வது மூளைக்கு போதிய ஓய்வைக் கொடுத்து நினைவுத்திறன்  சிறப்பாக செயல்பட துணை செய்யும்.
 
சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதும், மூளை சிறப்பாக செயல்பட துணை செய்யும். மூளைக்கு அவசியமான ஒமேகா-3, ஒமேகா-6 உள்ளிட்ட சத்துப் பொருட்கள் நிரம்பிய உணவுகளை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
 
உடல் எடையை கட்டுக்குள் வைப்பதாக கருதி, உணவை குறைத்தால் அது மூளை இயக்கத்தை தடை செய்து ஞாபகசக்தி குறைவை  ஏற்படுத்தலாம்.


இதில் மேலும் படிக்கவும் :