உடலிலுள்ள தேவையற்ற வாய்வை வெளியேற்றும் முடக்கத்தான் கீரை !!
முடக்கத்தான் கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, தாது சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சரியான அளவில் அடங்கியுள்ளது.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கத்தான் இலையை ரசம் போல வைத்துச் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள தேவையற்ற வாய்வு கலைந்து வெளியேறி விடும்.
முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டையும் குடிநீரில் இட்டு மூன்று வேளை அறுபது மில்லி வீதம் தொடர்ந்து சில நாட்கள் குடித்து வர நாள்பட்ட இருமல் சரியாகும்.
முடக்கத்தான் கொடி மலமிளக்கியாக செயல்படும் தன்மையுடையது. முடக்கத்தான் கொடியை குடிநீரில் இட்டு அதனுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து குடித்து வர கெட்டியாக உள்ள மலம் இளகி மலத்தைக் கழிக்கச் செய்யும்.
முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.