வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (19:05 IST)

முழு தாவரமும் மருத்துவத்தில் மருந்தாக பயன்படும் ஆவாரை !!

ஆவாரம் பூ நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக மருத்துவத்தில் பயன்படுகிறது.


ஆவாரையின் முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.

ஆவாரம் பூக்களையும், இலையையும் காய வைத்து பொடி செய்து, காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் அடையும். ஈரல் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.

கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து சாப்பிட்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு உள்ள மல‌ட்டு‌த் த‌ன்மை நீங்கி விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் தரிக்கும் நிலை உண்டாகும்.

சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போன்ற தோற்றம் உண்டாகும். அவ்வாறானவர்கள் ஆவாரம் பட்டை கஷாயம் சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்படைந்து முதுமை தோற்றம் ஏற்படாது.

ஆவாரம் பூக்களை போட்டு வேகவைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும்.

ஆவாரம் பூ தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும். பனங்கற்கண்டு மற்றும் வேறு எந்த இனிப்புகளும் சேர்க்காமலும் இத்தேனீரை பருகலாம்.