புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கடுக்காயை பயன்படுத்தும் முறைகளும் பலன்களும் !!

காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம்.


தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வருவதால் நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
 
கடுக்காய் மூளை செயல்திறனை அதிகரிக்கும் பண்புகளை அதிகமாக கொண்டுள்ளது. கடுக்காயில் உள்ள ஆக்சிஜனேற்ற தன்மை மனிதனின் நினைவுத்திறன்,  கவனம், அமைதி, விழிப்புணர்வு ஆகியவற்றை அதிகரிக்கின்றது.
 
திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு  வேண்டுமானாலும் சாப்பிடலாம். 
 
குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்.
 
நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம் - இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை - இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.
 
கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து  பல் வியாதிகளும் தீரும்.
 
கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.