திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By
Last Modified: புதன், 28 மார்ச் 2018 (15:27 IST)

நினைவாற்றலை அதிகரிக்கச் செய்வதில் வல்லமை பெற்ற வல்லாரை...!

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது.
பலவகையான மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த மூலிகை, இந்தியா முழுவதிலும் நீர் நிலைகள் அதாவது, ஆறு, கால்வாய், குளம், குட்டை, வயல்  வரப்புகளில் வளரும் பூண்டு வகையைச் சார்ந்தது. அரைவட்ட வெட்டுப் பற்களுடன், நீண்ட காம்புகளை உடைய இதய வடிவ இலைகளைக் கொண்டது. இக்கீரைக்கு பிராமி என்றும் சரஸ்வதி என்றும் வேறு பெயர்கள் உண்டு.
 
இக்கீரை குளிர்ச்சியைத் தரவல்லது. ஈரமான நிலத்தில் படர்ந்து வலரும் கொடியாகும். இதன் இலைகளின் ஓரங்கள் வேப்பிலையைப் போன்று காணப்படும். சுவை மிகுந்தது.
இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். இரும்பைப் போன்றிருக்கும். குரல் இனிமையும் ஏற்படும். தொண்டைக் கம்மல், குரல் கம்மல் போன்று எல்லாவித கம்மல்களும் நீங்கிவிடும்.
 
மூளிக்கு பலத்தை அளிக்கவல்லது. சுறுசுறுப்பை அளிப்பதோடு நினைவாற்றலை அதிகரிக்கச் செய்வதில் வல்லமை பெற்றது. வல்லாரைக் கீரை சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.
 
காக்கை வலிப்பு நோயை குணமாக்கவல்லது. யானைக்கால் வியாதி, கண்டமாலை போன்ற வியாதிகளைப் போக்கவல்லது. வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்கும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி போகும். மலச்சிக்கல் ஏற்படாதவாறு காக்கும்.
 
சில நேரங்களில் வாயில் அச்சரங்கள் ஏற்பட்டு உணவு சாப்பிட முடியாமல் கஷ்டப்பட நேரும். அத்தகைய நிலையில் இக்கீரையைச் சாப்பிட நோய் பூரண  குணமாகும். காய்ச்சல் வாத சம்பந்தமான வியாதிகள், வீக்கம், வலி இருந்தாலும் குனமாகும். மார்பு வலி இருந்தாலும் போகும். நரம்பு சம்பந்தப்பட்ட  வியாதிகளைப் போக்கி நரம்புகளுக்கு வலுவை அளிக்கவல்லது.
 
சிறுவர்களுக்கு ஏற்படும் சீதபேதி மற்றும் சரும நோய்களுக்கு இது நல்ல நிவாரணியாகும். இந்தக் கீரையை மைபோல அரைத்து சொறி, சிரங்குகளுக்கு  மேல்பூச்சாகப் போடலாம்.
 
நோய்க்கு மருந்தாக இக்கீரையை சாப்பிடுவதாக இருந்தால் உணவில் உப்பு, புளி, அதிகம் சேர்க்கக்கூடாது.