ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆரோக்கியம் காக்கும் ஆவாரம்பூ கஷாயத்தின் மருத்துவ பயன்கள்...!!

தேவையான பொருட்கள்:
 
ஆவாரம்பூ - 200 கிராம்,
சுக்கு - 2 துண்டு,
ஏலக்காய் - 3
உலர்ந்த வல்லாரை இலை - 200 கிராம்,
சோம்பு - 2 டீஸ்பூன்
 
செய்முறை:
 
மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையான போது அதில் கையளவு எடுத்து,  அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு  சேர்த்துக் குடிக்கலாம்.
 
மருத்துவப் பயன்:
 
சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
 
ஆவாரம் பூ கஷாயத்தை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும்.
 
வெப்பம் அதிகம் உள்ள காலங்கள் மற்றும் உடலுக்கு சில வகை நோய் பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் உடலில் நீர் சத்து வறண்டு நீர் வறட்சி ஏற்படும்.  இக்காலங்களில் ஆவாரம் பூ ஊற வைக்கப்பட்ட நீர் அல்லது ஆவாரம் பூ போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரை பருகி வந்தால் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை  போக்கலாம்.