செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஊறவைத்த பாதாமில் உள்ள மருத்துவ பயன்கள்!

நரம்பு மண்டலத்தை காக்கும் நியாஸின் உப்பும் இதில் அதிகம் உள்ளது. நார்ச்சத்தும் போதுமான அளவு உள்ளது. எனவே இதய நோயாளிகளும், பசி பொறுக்க முடியாதவர்களும் தினமும் பத்து பாதாம் பருப்புகளை சாப்பிடலாம்.

 
நீரில் ஊறவைத்த பாதாமிலிருந்து லிபேஸ் என்கிற நொதி வெளியிவிடப்படுகிறது. இதனை உண்ணும்போது, நாம் சாப்பிட்ட  மற்ற உணவுகள் எளிதில் செரிக்கின்றன.
 
இரவில் 10 முதல் 12 பாதாம் பருப்பை ஊற வைத்து காலையில் சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.
 
பாதால் எடுத்து கொள்வதால் இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை  ஊக்குவிக்கின்றது.
 
கொழுப்பு சத்து அதுகமுள்ள பாதாம் பருப்பு இரத்தத்தில் உள்ள தீய கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நல்ல  கொலஸ்ட்ராலை அளவுடன் வைக்க உதவுகிறது.
 
பாதாம் பருப்பில் மூளையையும் சிறுநீரகத்தையும் பாதுகாக்கும் பாஸ்பரஸ் உப்பு கால்சியத்தை விட இரு ந்\மடங்கு உள்ளது. இரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்தும் பாதாம் பருப்பில் தாராளமாக உள்ளது.
 
பாதாமில் கால்சியம் அதிகம் உள்ளதால் மெலிவுற்ற பெண்கள் எலும்பு மெலிவு நோயில் விழுந்து விடாமல் பாதுகாக்கும்.
 
கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் போதுமான அளவு கிடைக்கும்போது, குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது, பிறப்புக் குறைபாடுகள் குறைகின்றன. இந்த ஃபோலிக் அமிலத்தை ஊறவைத்த பாதாம் வழங்குகிறது.