1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Medical Tips to Help Cracked Heels !!

பாத வெடிப்பை சரிசெய்ய உதவும் மருத்துவ குறிப்புகள் !!

பாத வெடிப்பு
பாத வெடிப்பு என்பது அழகுப் பிரச்னையாக மட்டுமின்றி ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும்.


எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் பன்னீர்  ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாதத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு விரைவில் குணமாகும்.  
 
கால்களில் தோல்பகுதி வறண்டு காணப்பட்டால் இரவில் படுக்கும் முன்பு தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால் மிருதுவாக மாறுவதோடு வெடிப்பு ஏற்படாமல் இருக்கும். 
 
இரண்டு ஸ்பூன் அரிசி மாவுடன், சில துளிகள் தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பாதங்கள் மிகவும்  வறண்டு வெடிப்புகள் அதிகமாக இருந்தால் இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம். 
 
இது உங்கள் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம். 
 
இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு அந்த நீரில் கால்களை சில நிமிடங்களுக்கு வைத்திருந்து கால்கள் சுத்தமான பின் எடுத்து துடைக்க வேண்டும். இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம். 
 
இவ்வாறு செய்வதால் பாதங்கள் மற்றும் விரலிடுக்கில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனால் பாதங்கள் மென்மையாகும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
நெல்லிக்காய் ஜூஸ் பருகி வருவதால் என்னென்ன நன்மைகள் உண்டு தெரியுமா...?