1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (14:39 IST)

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் மங்குஸ்தான் பழம் !!

Mangosteen
மங்குஸ்தான் பழத்திற்கு உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்களும் உண்டு.


மங்குஸ்தான் பழத்தின் தோல், பட்டை, இலை போன்றவற்றிலும் மருத்துவ குணங்கள் உண்டு. இப்பழத்தோலில் துவர்ப்பு சுவை தரும் டானின் எனும் சத்து இருப்பதால் கடுமையான சீதபேதி, ரத்தப் பேதிக்கு மருந்தாக பயன்படுகிறது.

மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் சம்பந்தமான நரம்புகள் புத்துணர்ச்சியாகும்.

மங்குஸ்தான் பழத்தில் ஃபாலிபீனால்களான ஆல்பா சாந்தோன்ஸ், காமா சாந்தோன்ஸ் இந்த சத்துக்கள் காணப்படுகின்றன. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து புற்றுநோய் சம்பந்தமான செல்களை வளரவிடாமல் தடுத்து உடலை பாதுகாக்கிறது.

மங்குஸ்தான் பழத்தினை ஒரே நேரத்தில் அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் தினமும் 2 அல்லது 3 வீதம் எடுத்துக்கொண்டால் உடலுக்கு நன்மை பயக்கும்.

உடல் செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும், இதயத்துடிப்பு சீராக இருக்கவும், ரத்த அழுத்தம் இல்லாமல் இருக்கவும் பொட்டாசியம் சத்து பெரிதும் உதவியாக இருக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருப்பதால் இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.